வெள்ளத்தில் சிக்கிய தாயையும் பிள்ளைகளையும் காப்பாற்றிய இளைஞர்கள்

கொழும்பின் பல பகுதிகள் வியாழக்கிழமை இரவு வெள்ளத்தில் மூழ்கியிருந்தபோது, இடம்பெற்ற மனிதாபிமான செயலொன்று பரவலாகப் பேசப்படுகிறது. சிறிய மகளுடனும் மகனுடனும் பயணித்த தாய் ஒருவரின் கார் வெள்ளத்தில் சிக்கிய நிலையில், அங்கிருந்த இளைஞர் குழுவினர் அவர்களை வெளியே அழைத்து உயிரைக் காப்பாற்றியுள்ளனர். இச்செயலைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.



