வெள்ளப் பாதிப்பிலிருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலை வழமைக்குத் திரும்பியது

கொழும்பில் பெய்த கடும் மழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கினால் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சில செயற்பாடுகள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அனைத்தும் வழமைக்குத் திரும்பியுள்ளன. வைத்தியசாலை ஊழியர்கள் துரிதமாகச் சுத்திகரிப்புப் பணிகளை மேற்கொண்டு, சில மணித்தியாலங்களுக்குள் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சீரமைத்தனர். அப்பகுதியில் 129 மில்லிமீற்றர் மழை பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.



