கொழும்பில் 49 நிமிடங்களில் 120 மி.மீ. மழை: 'மேக வெடிப்பு' என பேராசிரியர் விளக்கம்

வியாழக்கிழமை (06.11.2026) மாலை எந்தவிதமான தீவிர வளிமண்டல நிலைமைகளும் இல்லாமல் குறுகிய நேரத்தில் கொழும்பில் மிகக் கனமழை பெய்த நிலையில், இதனை 'மேக வெடிப்பு' (cloud burst) என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறைப் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா விளக்கியுள்ளார். குறிப்பாக 49 நிமிடங்களில் 120 மில்லிமீற்றர் மழை பதிவாகியுள்ளது. 20 முதல் 30 சதுர கிலோமீற்றர் பரப்பில் ஒரு மணி நேரத்தில் 100 மில்லிமீற்றருக்கும் மேற்பட்ட மழை பெய்வதே இவ்வாறு அழைக்கப்படுகிறது என அவர் தனது Facebook பதிவில் குறிப்பிட்டுள்ளார்.



