கொழும்பை மூழ்கடித்த கனமழை: போக்குவரத்து, ரயில் சேவைகள் பாதிப்பு

வியாழக்கிழமை (06.11.2026) கொழும்பின் பல பகுதிகளில் பெய்த கடும் மழை காரணமாக வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியதோடு, கடுமையான வாகன நெரிசலும் ஏற்பட்டது. வெள்ளவத்தை, கோட்டை, மருதானை உள்ளிட்ட பகுதிகளில் வீதிகளில் வெள்ளநீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர். இதற்கிடையில் ரயில் சேவைகளும் பாதிப்புக்கு உள்ளாகின.



