IT Impress Tamil Newsஞாயிற்றுக்கிழமை, 8 நவம்பர் 2026
சமீபத்தியம்

தெனியாய அருகே நீராடச் சென்ற நால்வர் மாயம்; தேடுதல் நடவடிக்கைகள் தீவிரம்

தெனியாய அருகே நீராடச் சென்ற நால்வர் மாயம்; தேடுதல் நடவடிக்கைகள் தீவிரம்
தெனியாய அருகே நீராடச் சென்ற நால்வர் மாயம்; தேடுதல் நடவடிக்கைகள் தீவிரம் படம்: Praveenshashika (CC BY-SA 4.0)

தெனியாய, பெவரலிய பகுதியில் உள்ள நீரோடை ஒன்றில் நீராடச் சென்ற நால்வர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நுகேகொட பகுதியிலிருந்து வந்த ஏழு பேர் கொண்ட குழுவினர் பெவரலிய பகுதியிலுள்ள நீரோடையில் நீராடிக்கொண்டிருந்தபோது, அவர்களில் நால்வர் இவ்வாறு நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

காணாமல் போனோரைக் கண்டுபிடிப்பதற்கான தேடுதல் நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் கூறியுள்ளனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.