பரீட்சைகள் திணைக்கள இணையச் சான்றிதழ் சேவை: இரு நாட்கள் இடைநிறுத்தம்

இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் இணைய மூலமான சான்றிதழ் வழங்கும் சேவை அடுத்த இரண்டு நாட்களுக்குச் செயற்படாது எனப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கமைய, நவம்பர் 07 மற்றும் 08 ஆகிய இரு நாட்களுக்கும் இந்த இணையவழிச் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளது.



