IT Impress Tamil Newsஞாயிற்றுக்கிழமை, 8 நவம்பர் 2026
சமீபத்தியம்

எரிபொருள் நிவாரணம் டிசெம்பர் 31 உடன் நிறைவு; ஜனவரியில் விலை மாற்றம் சாத்தியம் - பிரதி அமைச்சர்

எரிபொருள் நிவாரணம் டிசெம்பர் 31 உடன் நிறைவு; ஜனவரியில் விலை மாற்றம் சாத்தியம் - பிரதி அமைச்சர்
எரிபொருள் நிவாரணம் டிசெம்பர் 31 உடன் நிறைவு; ஜனவரியில் விலை மாற்றம் சாத்தியம் - பிரதி அமைச்சர் படம்: Whorf, Robert P Robert Whorf and Associates United States. N (Public domain)

2026ஆம் ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் எரிபொருள் நிவாரணம் வழங்க ரூபா 98 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், எரிபொருள் நிவாரணத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதி எதிர்வரும் மாதம் 31ஆம் திகதியுடன் நிறைவடைவதாகவும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த அறிவித்துள்ளார்.

நேற்று (06.11.2026) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வின்போது இவ்வாறு குறிப்பிட்ட அவர், அதன் பின்னரும் இந்த நிவாரணத்தை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் ஆராயப்படும் என்றும் கூறியுள்ளார்.

மத்திய கிழக்கு மோதல் ஆரம்பித்த நாளில் இருந்து எரிபொருள் விநியோகத்தைப் பாதுகாப்பதற்கும், விலையை நிலையாகப் பேணுவதற்கும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.