IT Impress Tamil Newsஞாயிற்றுக்கிழமை, 8 நவம்பர் 2026
சமீபத்தியம்

வெளிநாட்டுத் தலைமறைவு குற்றவாளிகளை மீட்க சர்வதேச நடவடிக்கை

வெளிநாட்டுத் தலைமறைவு குற்றவாளிகளை மீட்க சர்வதேச நடவடிக்கை
வெளிநாட்டுத் தலைமறைவு குற்றவாளிகளை மீட்க சர்வதேச நடவடிக்கை படம்: Ellis, Edward S[ylvester], 1840- [from old catalog] (Public domain)

இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்குத் தப்பிச்சென்றுள்ள குற்றவாளிகளை அடுத்த ஆண்டுக்குள் நாட்டிற்குத் திரும்பக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகள் சர்வதேச மட்டில் நடைபெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரெடெரிக் உதயகுமார வூட்லர் தெரிவித்துள்ளார். சர்வதேச பொலிஸ் (Interpol) மூலம் சிவப்புப் பிடியாணைகள் பிறப்பிக்கப்படுவதும் இந்நடவடிக்கையின் ஒரு பகுதியாகும்.