கம்பஹா நீதவானின் திடீர் இடமாற்றம்: எதிர்க்கட்சிகள் கண்டனம்

கம்பஹா நீதிமன்ற நீதவான் பந்துல குணரட்ன திடீரென இடமாற்றம் செய்யப்பட்டமைக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. பொலிஸ் மா அதிபருக்கு எதிராகத் தைரியமாகத் தீர்மானம் எடுத்த நீதவானை இடமாற்றம் செய்வது அநீதியானது என நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசாநாயக்க தெரிவித்துள்ளார்.



