IT Impress Tamil Newsஞாயிற்றுக்கிழமை, 8 நவம்பர் 2026
சமீபத்தியம்

கம்பஹாவுக்குப் புதிய பிரதான நீதவான்: கொசல சேனாதீர நியமனம்

கம்பஹாவுக்குப் புதிய பிரதான நீதவான்: கொசல சேனாதீர நியமனம்
கம்பஹாவுக்குப் புதிய பிரதான நீதவான்: கொசல சேனாதீர நியமனம் படம்: Samfedo (CC BY-SA 4.0)

கம்பஹா புதிய பிரதான நீதவானாகக் கொசல சேனாதீரவை நீதிச்சேவை ஆணைக்குழு நியமித்துள்ளது. நியமனக் கடிதம் வியாழக்கிழமை (06.11.2026) ஆணைக்குழுவின் செயலாளர் பிரசன்ன அல்விஸினால் வெளியிடப்பட்டது; எதிர்வரும் திங்கட்கிழமை (09.11.2026) முதல் அவர் கடமைகளைப் பொறுப்பேற்கிறார். தற்போதைய தலைமை நீதவான் பந்துல குணரத்ன இடமாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்நியமனம் வெளியாகியுள்ளது.