கோவை பெரியார் அறிவுலகம்: நூல் கொள்முதல் சர்ச்சை; விசாரணைக்கு உத்தரவு

கோவை காந்திபுரத்தில் தமிழக அரசு சுமார் 300 கோடி ரூபாய் செலவில் அமைத்த பெரியார் அறிவுலக நூலகத்தை கடந்த அக்டோபர் 16 ஆம் திகதி முதலமைச்சர் Vijay திறந்துவைத்தார். இந்நிலையில், நூல் கொள்முதலில் கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடு நடைபெற்றதாகவும், நூலகத்திற்கு நூல்கள் வழங்குவதற்காகவே புதிய பதிப்பகங்கள் தொடங்கப்பட்டதாகவும், செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட நூல்கள் போலியான ஆசிரியர் பெயர்களில் வைக்கப்பட்டுள்ளதாகவும் எழுத்தாளர் Perumal Murugan குற்றம்சாட்டினார்.
குற்றம்சாட்டிய நூல்களை உடனடியாக அகற்றி, முறைகேட்டில் ஈடுபட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் கோரிய நிலையில், விரிவான விசாரணை நடத்தப்படும் என அமைச்சர் Rajmohan தெரிவித்தார். இது DMK ஆட்சிக் காலத்தில் நடந்த முறைகேடு என முதலமைச்சர் Vijay பதிவு வெளியிட்டுள்ள நிலையில், DMK தலைவருக்குக் கிடைத்த பெருமையைத் திசைதிருப்ப திட்டமிட்டுப் பரப்பப்படும் தகவல் என DMK தரப்பு மறுத்துள்ளது.



