IT Impress Tamil Newsஞாயிற்றுக்கிழமை, 8 நவம்பர் 2026
சமீபத்தியம்

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் Mohammed Shami

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் Mohammed Shami
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் Mohammed Shami படம்: Aidan_S (CC BY 2.0)

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் Mohammed Shami டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இருப்பினும், ஒருநாள், T20, IPL மற்றும் உள்நாட்டுப் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.

2013 நவம்பர் 6ஆம் திகதி டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான Shami, இந்திய அணிக்காக 64 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 229 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதே போன்று, 2023 உலகக் கிண்ணத்தில் 24 விக்கெட்டுகளை வீழ்த்திச் சாதனை படைத்துள்ளார்.

2025 Champions Trophy அவரது கடைசிச் சர்வதேசப் போட்டியாக இருக்கும் எனச் சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகிய போதிலும், வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடி ரசிகர்களை மகிழ்விப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.