IT Impress Tamil Newsஞாயிற்றுக்கிழமை, 8 நவம்பர் 2026
சமீபத்தியம்

Los Angeles மேயரான Nithya Raman: கேரளத்தில் பிறந்த தமிழ்ப் பெண்ணின் வரலாற்றுச் சாதனை

Los Angeles மேயரான Nithya Raman: கேரளத்தில் பிறந்த தமிழ்ப் பெண்ணின் வரலாற்றுச் சாதனை
Los Angeles மேயரான Nithya Raman: கேரளத்தில் பிறந்த தமிழ்ப் பெண்ணின் வரலாற்றுச் சாதனை படம்: Nithya Raman (Public domain)

அமெரிக்காவின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான Los Angeles-இன் மேயர் தேர்தலில் இந்திய வம்சாவளிப் பெண்மணி Nithya Raman வெற்றி பெற்றுள்ளார். கேரளத்தின் Thrissur-இல் 1981 ஜூலை 28 ஆம் திகதி தமிழ் குடும்பத்தில் பிறந்த அவர், ஆறு வயதில் குடும்பத்துடன் அமெரிக்கா குடிபெயர்ந்தவர்.

புலம்பெயர்ந்தோரில் ஒருவராகத் தம்மை அடையாளப்படுத்திக்கொள்வதில் பெருமை கொள்வதாகத் தனது தேர்தல் பிரசாரப் பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்; Los Angeles மாவட்ட மக்களில் மூன்றில் ஒரு பங்கினர் புலம்பெயர்ந்தோர் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜனநாயக சோசலிசவாதியான அவர், ஜனாதிபதி Trump-இன் கடும் குடியேற்ற நடவடிக்கைகளை எதிர்ப்பதைத் தனது பிரதான இலக்குகளில் ஒன்றாகப் பிரசாரத்தில் முன்வைத்திருந்தார். அரசியலுக்கு வரும் முன்னர் சென்னையில் மகளிர் மேம்பாட்டுத் துறையிலும், பின்னர் Los Angeles-இல் வீடற்றோர் நலப் பணிகளிலும் ஈடுபட்டிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.