IT Impress Tamil Newsஞாயிற்றுக்கிழமை, 8 நவம்பர் 2026
சமீபத்தியம்

ரோஹித போகொல்லாகமவுக்கு பிணை; நிபந்தனைகளை நிறைவேற்ற முடியாததால் மீண்டும் சிறையில்

ரோஹித போகொல்லாகமவுக்கு பிணை; நிபந்தனைகளை நிறைவேற்ற முடியாததால் மீண்டும் சிறையில்
ரோஹித போகொல்லாகமவுக்கு பிணை; நிபந்தனைகளை நிறைவேற்ற முடியாததால் மீண்டும் சிறையில் படம்: Nuwaiza (CC BY 4.0)

ஊழல் குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இலங்கையின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவுக்கு பிணையில் செல்ல கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

எனினும், நீதிமன்றம் விதித்த பிணை நிபந்தனைகளை நிறைவேற்ற முடியாததால், அவர் மீண்டும் சிறைச்சாலைக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷாந்த கோடவெல இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

முன்னதாக, சாட்சியங்களை முன்வைக்காமல் அவரை விடுவிக்குமாறு சட்டத்தரணிகள் முன்வைத்த கோரிக்கையை நீதிபதி நிராகரித்து, எதிர்த்தரப்பு சாட்சியங்களை முன்வைக்க உத்தரவிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.