ரோஹித போகொல்லாகமவுக்கு பிணை; நிபந்தனைகள் நிறைவேறாததால் மீண்டும் சிறையில்

ஊழல் குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இலங்கையின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவுக்கு, கொழும்பு மேல் நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதி வழங்கியது. எனினும், நீதிமன்றம் விதித்த பிணை நிபந்தனைகளை நிறைவேற்ற முடியாததால், அவர் மீண்டும் சிறைச்சாலைக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.



