இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்புச் சொத்துக்கள் $7,086 மில்லியனாக அதிகரிப்பு

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்புச் சொத்துக்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மத்திய வங்கியின் தகவலின்படி, உத்தியோகபூர்வ கையிருப்புச் சொத்துக்கள் ஒக்டோபர் 2026-இல் 3.2% அதிகரித்து 7,086 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளன.
இது செப்டம்பர் 2026-இல் பதிவான 6,867 மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடுகையில் ஏற்பட்ட அதிகரிப்பாகும். இக்கையிருப்புச் சொத்துக்களில் சீன மக்கள் வங்கியுடனான நாணயப் பரிமாற்ற ஒப்பந்தத்தின் (currency swap) மூலம் கிடைத்த நிதியும் உள்ளடங்குவதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.



