IT Impress Tamil Newsஞாயிற்றுக்கிழமை, 8 நவம்பர் 2026
சமீபத்தியம்

பிரதம பொலிஸ் பரிசோதகர் வருணி போகஹவத்த உட்பட ஐவர் நவம்பர் 20 வரை விளக்கமறியலில்

பிரதம பொலிஸ் பரிசோதகர் வருணி போகஹவத்த உட்பட ஐவர் நவம்பர் 20 வரை விளக்கமறியலில்
பிரதம பொலிஸ் பரிசோதகர் வருணி போகஹவத்த உட்பட ஐவர் நவம்பர் 20 வரை விளக்கமறியலில் படம்: Jorge Láscar (CC BY-SA 2.0)

மாத்தறை, கொட்டவில பொலிஸ் நிலையத்தின் நிர்வாகப் பிரிவுக்குப் பொறுப்பாகப் பணியாற்றிய பிரதம பொலிஸ் பரிசோதகர் வருணி போகஹவத்த உட்பட ஐந்து சந்தேகநபர்களையும் எதிர்வரும் நவம்பர் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மாத்தறை பிரதம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வாகனம் ஒன்றைக் கொள்வனவு செய்வதற்கும் அதன் குத்தகைக் கட்டணங்களைச் செலுத்துவதற்கும் பயன்படுத்தப்பட்ட பணத்தின் மூலத்தை வெளிப்படுத்தத் தவறிய குற்றச்சாட்டில் அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டிருந்தார்.

குறித்த வாகனத்தின் குத்தகைக் கட்டணங்களை, மாத்தறை கூட்டுறவுச் சங்கத்தில் ஒரு பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி மோசடியில் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் செலுத்தியதாகக் கூறப்படுகிறது.

விசாரணைகள் நிறைவடைந்து, அதன் அறிக்கைகள் நவம்பர் 20ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.